கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 8வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி எப்சி, கோவா எப்சி அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் மும்பை வீரர் இகோர் அங்குலோ 33 மற்றும் 36வது நிமிடத்தில் கோல் அடிக்க முதல் பாதியில் 2-0 என மும்பை முன்னிலை பெற்றது. 2வது பாதியிலும் மும்பையின் ஆதிக்கம் தொடர்ந்தது. 76வது நிமிடத்தில் மும்பை வீரர் கோர் கடாட் கோல் அடித்தார். கடைசி வரை போராடியும் கோவாவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 3-0 என்ற கோல் கணக்கில் மும்பை வெற்றி பெற்றது.