மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கல்லூரி மாணவி உள்பட 2 பெண்களுக்கு நிதி உதவி

ஊட்டி :  ஊட்டியில்  உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடந்தது. மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை  வகித்தார். இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை  வழங்கினார். தொடர்ந்து ஊட்டி காந்தல் மேல் போகித்தெரு பகுதியை சேர்ந்த  சர்மிளா கல்லூரி கட்டணம் செலுத்த நிதி உதவி செய்யக்கோரி மனு அளித்ததை  தொடர்ந்து அவருக்கு கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.20  ஆயிரத்திற்கான காசோலை வழங்கினார்.

இதேபோன்று ஊட்டி காந்தல் தியாகி குமரன் தெரு பகுதியை சேர்ந்த  சுதா என்பவர் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு தள்ளுவண்டி கடை சேதமடைந்தது  குறித்து நிதியுதவி வழங்கக்கோரி மனு அளித்திருந்தார். இதனை ஏற்று அவருக்கும்  ரூ.10 ஆயிரம் நிதியுதவிக்கான காசோலை ஆகியவை வழங்கப்பட்டது. கூட்டத்தில்  மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தனப்பிாியா, மருதாச்சலம், மாவட்ட  வழங்கல் அலுவலர் பூபதி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: