நாச்சியார்பேட்டை-எருமனூர் சாலையில் வெள்ளம்-போக்குவரத்து பாதிப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் நகரத்தில் இருந்து நாச்சியார்பேட்டை வழியாக எருமனூர், தொட்டிக்குப்பம், ரெட்டிகுப்பம், மு.பட்டி, முகாசபரூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையை பயன்படுத்தி பொது மக்கள் அன்றாட தேவைகளுக்காக விருத்தாசலம் மற்றும் மங்கலம்பேட்டை சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் இயங்கி வருவதால் அதிக அளவில் மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகவும், விவசாய நிலங்களில் இருந்து வரும் வடிகால் நீரும், அருகே உள்ள மாரி ஓடை பகுதியில் வரும் வெள்ள நீரும் சேர்ந்து சாலையின் குறுக்கே பாய்ந்து செல்கிறது. இதனால் அப்பகுதியில் நேற்று பொதுமக்கள் மிகச் சிரமத்துடன் போக்குவரத்து செய்து வருகின்றனர். இப்பகுதி மிகவும் தாழ்வான பகுதி என்பதால், மழை நீர் தேங்காதவாறு கால்வாய்கள் அமைக்கவும், பாலங்கள் அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: