பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தனியார் பள்ளியில் படிக்கும் 30க்கும் மேற்பட்ட மாணவர்களை அங்குள்ள கிராமங்களில் இருந்து ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் நேற்று காலை சென்றது. வேனை அக்கச்சிப்பட்டி ஹரி (22) என்பவர் ஓட்டினார். தொண்டைமான் ஊரணி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்து, குமிழிக்கட்டையில் மோதி சாய்ந்தது. இதில் 15 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு மழையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

The post பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம் appeared first on Dinakaran.

Related Stories: