சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை; 3வது ஆண்டாக முதல் இடத்தில் ஆஷ்லே பார்டி..! முகுருசா 3வது இடத்திற்கு முன்னேறினார்

துபாய்: ஆண்டு இறுதியில் டபிள்யூடிஏ மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி முதல் இடத்தில் நீடிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் சர்வதேச மகளிர் டென்னிஸ் சம்மேளனம் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2021ம் ஆண்டின் இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவின் 25 வயதான ஆஷ்லே பார்டி தொடர்ந்து 3வது ஆண்டாக முதல் இடத்தில் நீடிக்கிறார். இதற்கு முன் ஸ்டெபி கிராஃப், மார்டினா நவரத்திலோவா, செரீனா வில்லியம்ஸ் மற்றும் கிறிஸ் எவர்ட் ஆகியோர் தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஆண்டு

இறுதியில் நம்பர்-1 இடத்தை பிடித்திருந்தனர்.

பெலாரசின் 23 வயதான அரினா சபலென்கா 2வது இடத்தில் நீடிக்கிறார். நேற்று டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினின் முகுருசா, 5வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 4வது இடத்தில் உள்ளார். பார்போரா கிரெஜ்சிகோவா 3வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு பின்தங்கி உள்ளார். (இரட்டையர் பிரிவில் இவர் 2வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது). கிரீஸ் நாட்டின் மரியா சக்கரி 6, எஸ்தோனியாவின் அனெட் கோன்டாவெய்ட் 7, ஸ்பெயிலின் பவுலா படோசா 8, இகா ஸ்விடெக் 9,  துனிசியாவின் ஓன்ஸ் ஜாபூர் 10வது இடத்திலும் உள்ளனர்.

Related Stories: