ராமதாஸ் மற்றும் ஒன்றிய அமைச்சர் முருகன் மீது திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி அவதூறு வழக்கு தாக்கல்: எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: முரசொலி அறக்கட்டளை அலுவலக இடம் தொடர்பாக தவறான செய்திகளை வெளியிட்டு அவதூறு பரப்பியதாக பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக பாஜ முன்னாள் தலைவர் எல்.முருகன், பாஜ நிர்வாகி டாக்டர் சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்குமாறு திமுக அமைப்பு செயலாளர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கு உரிய பதில் வராததால் அவர்கள் மீது ஆர்.எஸ்.பாரதி சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தனித்தனியாக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை விசாரித்த எழும்பூர் 14வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வழக்கை டிசம்பர் 16ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

மேலும், இந்த வழக்குகளில் புகார்தாரர் முன்னாள் எம்பி என்பதால் எம்.பி.., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தவுடன் பாமக நிறுவனர் ராமதாஸ், ஒன்றிய இணை அமைச்சரும், பாஜ முன்னாள் மாநில தலைவருமான எல்.முருகன் மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பும் என்று மனுதாரர் ஆர்.எஸ்.பாரதியின் வழக்கறிஞர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

Related Stories: