ஆவணங்களை புதுப்பிக்காத வாகனங்கள் மீது ஆர்டிஓக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: போக்குவரத்து துறை கடிதம்

சென்னை: தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து, முடிவுற்ற நிலையில் உள்ள அனைத்து வாகனங்களின் ஆவணங்களை புதுப்பிக்க 31.10.2021 முடிய கால அவகாசம் நீட்டித்து உத்தரவிடப்பட்டது. தற்போது கால அவகாசம் முடிவுற்ற நிலையில், சில போக்குவரத்து வாகனங்கள் முடிவுற்ற ஆவணங்களை புதுப்பிக்காமல் பொதுச் சாலையில் இயக்குவதாக தெரிய வருகிறது.

அவ்வாறு இயக்கப்படும் நிலையில் விபத்துகள் ஏற்பட்டால், காப்பீடு வழங்க இயலாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்களின் பயணத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை உள்ளது. எனவே, அனைத்து சரக அலுவலர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தகுதிச் சான்று, காப்புச் சான்று, புகைச் சான்று மற்றும் இதர ஆவணங்கள் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் வாகனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை தினசரி மேற்கொண்டு அதன் விவரத்தினை உரிய படிவத்துடன் வாரம் தோறும் திங்கள் காலை 11 மணிக்குள் அனுப்ப வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது.

Related Stories: