வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் குமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் குமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்கள், சேலம், புதுக்கோட்டையில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை நீடிக்கும். வங்கக்கடலில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. சேலம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டையில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும்.

Related Stories: