இந்திய மகளிர் கால்பந்து அணி பிரேசில் பயணம்

புதுடெல்லி: இந்திய மகளிர் கால்பந்து அணி கடந்த மாதம் ஐக்கிய அமீரகம் சென்று துபாய், துனிசியா, பஹ்ரைன் மற்றும் சீன தைபே நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஆட்டங்களில் விளையாடியது.  துனிசியாவுக்கு எதிரான ஆட்டம் தவிர்த்து மற்ற அணிகளுடன் மோதிய ஆட்டங்களில் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தி அசத்தியது. இந்நிலையில், இந்திய அணி அடுத்து பிரேசில்  சென்று சர்வதேச ஆட்டங்களில் விளையாட உள்ளதாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி நவ.25ம் தேதி பிரேசில் அணியையும், நவ.28ம் தேதி சிலி அணியையும், டிச.1ல் வெனிசுலா அணியையும் எதிர்த்து விளையாட உள்ளது. உலக தர வரிசையில் முன்னாள் உலக சாம்பியனான பிரேசில் 7வது இடத்திலும்,  சிலி 37வது இடத்திலும், வெனிசுலா 56வது இடத்திலும் இருக்கின்றன. இந்திய மகளிர் அணி 57வது இடத்தில் உள்ளது. இந்திய மகளிர் கால்பந்து அணி தென் அமெரிக்க நாடுகளுக்கு எதிராக  விளையாடப் போவது இதுவே முதல் முறையாகும்.

Related Stories: