காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழையால் 1000 ஏக்கர் நெற்பயிர் மூழ்கி நாசம்: நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சுமார் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் மழையால் நாசம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிவர் புயலாக வலுப்பெற்று நேற்று (நவ.26) அதிகாலை மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம், ஈஞ்சம்பாக்கம், கம்மவார்பாளயைம், வேளியூர், களியனூர், வையாவூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். மூன்று போகமும் நெல் சாகுபடி செய்யும் இப்பகுதியில் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மழையால் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும், கிராமங்களில் வேளாண்துறை, வருவாய் துறை கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்டு வேலையில்லாமல் இருக்கும் ஏழைகளின் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் நேரு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (நவ.8) காலை 6 மணி நிலவரப்படி மழையளவு விவரம் (மி.மீ)

காஞ்சிபுரம்    23.60

ஸ்ரீபெரும்புதூர்    71.60

உத்திரமேரூர்    41.00

வாலாஜாபாத்    17.20

செம்பரம்பாக்கம்    46.40

குன்றத்தூர்    66.70

Related Stories: