சித்தூர் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

சித்தூர் : சித்தூர் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு மாவட்டம் மட்டுமின்றி தெலங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தரிசனம் ெசய்யும் தங்களால் முடிந்த காணிக்கையான நகை மற்றும் பணத்தை கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள வாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல் காணிக்கை 28 நாட்களுக்கு ஒருமுறை எண்ணப்படுகிறது. சிலர் கோயிலுக்கு நன்கொடையாக பசுக்கள் மற்றும் அன்னதாகம் வழங்குவதற்காக காய்கறிகள் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.  

இந்நிலையில், கடந்த 3,4ம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. நேற்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் 5 மணிநேரம் ஆயிரத்திற்கும் மேற்பட்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு எவ்வித இடையூறு இல்லாத வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Related Stories: