அணைக்கட்டு அடுத்த குச்சிப்பாளையத்தில் கழிவுநீர் கால்வாய், சிமென்ட் சாலை அமைக்கப்படும்-ஆய்வு செய்த அதிகாரிகள் தகவல்

அணைக்கட்டு : அணைக்கட்டு அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் மற்றும் தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்கப்படும் என ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அணைக்கட்டு ஒன்றிய பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பி கோடி போகிறது.

இந்நிலையில், திப்பசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட குச்சிப்பாளையம் கிராமத்தில் கால்வாய் வசதி இல்லாததால், மழைநீர் கழிவுநீருடன் கலந்து தெருக்களில் தேங்குவதாகவும், வீடுகளுக்குள் புகுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்னர்.

அதன்பேரில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரன், பிடிஓ சுதாகரன், ஒன்றிய பொறியாளர் சிவக்குமார், பணி மேற்பார்வையாளர் கிருபாகரன், ஊராட்சி தலைவர்கள் கீதா வெங்கடேசன், புஷ்பா மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அங்குள்ள தெருக்களில் தேங்கியிருந்த கழிவுநீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். மேலும், தெருக்களில் புதிதாக சிமென்ட் சாலை மற்றும் கால்வாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

Related Stories: