தனது வாகன பயணத்தின்போது பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது; டிஜிபியிடம் தமிழக ஆளுநர் அறிவுறுத்தல்.!

சென்னை: தனது வாகன பயணத்தின்போது பொதுமக்கள் பாதிக்கப் படக்கூடாது என்று டிஜிபியிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். ஆளுநர் பாதுகாப்பு வாகனம் செல்லும் போது பொது மக்கள் பாதிக்கபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், டிஜிபி சைலேந்திரபாபு அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை ராஜ் பவனில் நேற்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திர பாபு அவர்களிடம்,மாண்புமிகு தமிழக ஆளுநர்ஆர்.என். ரவி,தனது வாகனப் பயணத்தின் போது பொதுமக்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். ஆளுநரின் நடமாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக காவல்துறை தலைமை இயக்குனரை மாண்புமிகு ஆளுநர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: