பஞ்சாப் காங்கிரசின் தலைவர் பதவியை ஏற்க சித்து புதிய நிபந்தனை: ராஜினாமா கடிதம் வாபஸ்

சண்டிகர்: பஞ்சாப் காங்கிரசை சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து, இந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், சித்துவுக்கும் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால், கடந்த செப்டம்பரில் முதல்வர் அமரீந்தர் பதவிவிலகினார். சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகிய அவர், புதிய கட்சியையும் தொடங்கினார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 28ம் தேதி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக  கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு சித்து கடிதம் அனுப்பினார். இதை ஏற்க மறுத்த மேலிடம், மீண்டும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கும்படி சித்துவை வலியுறுத்தியது.

ஆனால், பஞ்சாப் டிஜிபி, அட்வகேட் ஜெனரல் நியமனம் தொடர்பாக அவருக்கும் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கும் மோதல் ஏற்பட்டது. இவர்களை மாற்றும்படி சித்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப  பெறுவதாக சித்து நேற்று அறிவித்தார். சண்டிகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘நான் தற்பெருமைக்காக இந்த பதவியை ராஜினாமா செய்யவில்லை. ஒவ்வொரு பஞ்சாப் மக்களின் நலனுக்காகதான் செய்தேன். பஞ்சாபில் புதிய அட்டர்ஜி ஜெனரல் நியமிக்கப்பட்ட பிறகதான் தலைவர் பதவியை ஏற்பேன். முதல்வருடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடு கிடையாது. நான் என்ன செய்தாலும் அது பஞ்சாப்புக்காக தான் இருக்கும். பஞ்சாப் எனது ஆன்மா. அதுவே எனது இலக்கு,” என்றார்.

Related Stories: