அபுதாபி: நபீபியா அணியுடனான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில் (2வது பிரிவு), பாகிஸ்தான் அணி 45 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. ரிஸ்வான், கேப்டன் பாபர் ஆஸம் இருவரும் பாகிஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் 10 ஓவரில் 59 ரன் மட்டுமே சேர்த்தது. பாபர் 39 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 70 ரன் (49 பந்து, 7 பவுண்டரி) விளாசி வீஸ் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த ஸமான் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ரிஸ்வானுடன் முகமது ஹபீஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நமீபியா பந்துவீச்சை பதம் பார்க்க, ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஜேஜே ஸ்மிட் வீசிய கடைசி ஓவரில் 4 பவுண்டரி, 1 சிக்சர் உள்பட 24 ரன் விளாசி மிரட்டினார்.