இந்திய வீரர்களின் மோசமான ஷாட் தேர்வு: மாஜி வீரர்கள் பாய்ச்சல்

உலக கோப்பை டி.20 தொடரில் இந்திய அணியின் அடுத்தடுத்த தோல்வியால் இந்திய அணியின் செயல்பாடுகளை மாஜி வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். சேவாக்: இந்தியாவின் தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. நியூசிலாந்து செயல்பாடு ஆச்சரியமாக இருந்தது. இந்திய வீரர்களிடம் உடல் மொழி சிறப்பாக இல்லை, மோசமான ஷாட் தேர்வு. இந்த தோல்வி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளது. சில தீவிர சுயபரிசோதனை தேவை.

விவிஎஸ் லட்சுமணன்: இந்த தோல்வி இந்திய அணியை காயப்படுத்தும். பேட்ஸ்மேன் களின் ஷாட் தேர்வு கேள்விக்குறியாக இருந்தது. நியூசிலாந்து சிறப்பாக பந்துவீசியது. இந்தியாவின் அரையிறுதி இடம் என்பது தொலைதூரக் கனவாகத் தெரிகிறது.

Related Stories: