அடுத்தடுத்த 2 போட்டிகளில் தோல்வியால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு மங்கியது. பாகிஸ்தான் (இந்தியா, நியூசிலாந்து, ஆப்கன்) 3 போட்டியிலும் வென்று கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. ஆப்கன் 2, நியூசிலாந்து, நமீபியா தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இந்தியா 3ம்தேதி ஆப்கனுடன் மோதுகிறது. இந்தியாவை விட ஆப்கன் இந்த தொடரில் சிறப்பாகவே ஆடுகிறது. பாகிஸ்தானுக்கு தண்ணி காட்டியது. இதனால் இந்தியாவை வீழ்த்தினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.