கேரளத்தில் தொடரும் கனமழையால் முல்லை பெரியாறு அணையில் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் ஆய்வு

கேரளா: முல்லை பெரியாறு அணையில் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கேரளத்தில் தொடரும் கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 138 அடியை எட்டியது. முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,340 கன அடி, கேரளாவுக்கு 2,974 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையில் பொதுப்பணித்துறை மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் கிருஷ்ணன் ஆய்வு மேற்கொள்கிறார். அணையின் வழிந்தோடிகள், நீர் வெளியேற்றக் கணக்கீடுகள், மதகுகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெறுகிறது. பேபி அணை, மண் அணையில் மேம்பாட்டுப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories: