கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது: ஆனந்த கண்ணீருடன் வேட்பாளர் பதவியேற்பு

நெமிலி: ராணிப்பேட்டை மாவட்டம்  நெமிலி ஒன்றியக்குழு தேர்தல் இடஒதுக்கீட்டில் குளறுபடி எனக்கூறி ஐகோர்ட்டில் அதிமுகவினர் வழக்கு தொடர்ந்தனர். இதனால், கடந்த 22ம் தேதி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் நடக்கவில்லை. இந்த ஒன்றியத்தில் திமுக 8, பாமக 5, அதிமுக 4, சுயேச்சை 2 ஆகிய 19 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதனால், ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டது. கோர்ட் உத்தரவுக்கு பின்னர் தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. இதற்காக திமுக, பாமக மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் உட்பட 15 பேர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிடிஓ அலுவலகத்திற்கு வந்தனர். அதிமுக கவுன்சிலர்கள் 4 பேரும் வரவில்லை. இதையடுத்து, காலை 10 மணியளவில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தன், பிடிஓ பாஸ்கரன் தலைமையில் தேர்தல் நடந்தது.

அப்போது, திமுக கவுன்சிலர் வடிவேலு மனு அளித்தார். அவரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பதவியை இதுவரை திமுக கைப்பற்றியதில்லை. தற்போது முதன்முறையாக திமுக கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, தேர்வு செய்யப்பட்ட வடிவேலு ஆனந்த கண்ணீருடன் பதவியேற்றுக்கொண்டார்.பின்னர், துணைத்தலைவராக  தீனதயாளன் (பாமக) போட்டியின்றி தேர்ந்ெதடுக்கப்பட்டார்.

Related Stories: