காஞ்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்தில் ரூ.44 லட்சம் மதிப்பில் பயணியர் மெகா நிழற்குடை: எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல் நாட்டினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மெகா நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்திடமும், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசனிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் சட்டமன்ற நிதியிலிருந்து 44.86 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.இந்த நிதியில் பேருந்து நிலையத்தில் சென்னை பேருந்துகள் நின்று செல்லும் இடத்தில் 6 மீட்டர் உயரத்திற்கு மெகா பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக நேற்று காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் அடிக்கல் நாட்டி பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பணியினை துவக்கி வைத்தார்.

மேலும் இதை தொடர் ந்து காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியிலுள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா வளாகத்தில் இளைஞர்களின் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம் சட்டமன்ற நிதியிலிருந்து ரூ.25 லட்சத்தில் புதியதாக உடல் பயிற்சிக் கூடம் அமைக்கவும் எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் லட்சுமி, பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் சரவணன், திமுக நகர செயலாளர் சன்பிராண்ட்.கே.ஆறுமுகம்,திமுக மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.பி.சேகர் அவைத்தலைவர் சந்துரு யுவராஜ் மாமல்லன் கமலக்கண்ணன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.

Related Stories: