பசுமை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

புதுடெல்லி: இந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது காலை 4 மணி நேரமும், மாலை 4 மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கும்படி கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம், பேரியம் மற்றும் நைட்ரேட் ரசாயனங்கள் அடங்கிய பட்டாசுகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது. பட்டாசு வெடிக்கும் நேரத்தை நீட்டிப்பது பற்றி இன்னும் அது உத்தரவு பிறப்பிக்கவில்லை.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்திய பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று புதிய மனு தாக்கல் செய்தது.

அதில், ‘தடை செய்யப்பட்ட வேதிப்பொருளை கொண்டு பசுமை பட்டாசு தயாரித்து விற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. இந்த விவகாரத்தில் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு, ‘ரப்பர் ஸ்டாம்பு’ போல் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டும் பொய்யானது.  எனவே, பசுமை பட்டாசு தயாரிப்பதை அனுமதிப்பதோடு, தீபாவளி பண்டிகையின் போது சுற்றுச்சூழலுக்கும், உடல் நலத்துக்கும் தீங்கு விளைவிக்காத பசுமை பட்டாசுகளை கால நேரமின்றி வெடிக்க அனுமதிக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: