பாகிஸ்தானுக்கு உளவு எல்லை பாதுகாப்பு வீரர் கைது

பூஜ்: ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் சரோலா கிராமத்தை சேர்ந்தவர் முகமது சஜ்ஜித். எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) வீரரான இவர், கடந்த ஜூலை மாதம், குஜராத்தின் பூஜ் பகுதியில் 74 பிஎஸ்எப் பட்டாலியன் படைப்பிரிவில் பணியமர்த்தப்பட்டார். பிஎஸ்எப் படையில் கடந்த 2012ல் சேர்ந்த சஜ்ஜித் பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர், ராணுவ ரகசிய தகவல்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி உள்ளார்.

இதற்காக சஜ்ஜித்தின் சகோதரர் வஜித் மற்றும் கல்லூரி நண்பர் ரஷித் ஆகியோரின் வங்கி கணக்குகளில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சஜ்ஜித் ஜம்முவில் பெற்ற பாஸ்போர்ட் மூலம் 46 நாட்கள் பாகிஸ்தானுக்கு சென்று வந்துள்ளார். மேலும் திரிபுராவில் சிம்கார்டு வாங்கி உள்ளார். அது பாகிஸ்தானில் இருந்து செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.  இந்த தகவல்களின் அடிப்படையில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், சஜ்ஜித்தை கைது செய்துள்ளனர். கைதான சஜ்ஜித்திடம் தீவிரவாத தடுப்பு படையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More
>