பொதுப்பணித்துறை பராமரிப்பு பிரிவு: அத்தியாவசிய பணிகளின் பட்டியலில் சேர்ப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் பொதுப்பணித்துறை பராமரிப்பு பிரிவை அத்தியாவசிய பணிகளின் பட்டியலில் சேர்த்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகளை போன்று பொதுப்பணித்துறையும் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளின் பராமரிப்பு பணிகள் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தியவாசிய பணிகளின் பட்டியலில் பொதுப்பணித்துறை பராமரிப்பு பிரிவு சேர்க்கப்படவில்லை. இதனால், அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. அதே நேரத்தில் பொறியாளர்கள் சிலர் மட்டும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே மருத்துவமனைகளுக்கு சென்று இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர்.இதனால், பொதுப்பணித்துறை பராமரிப்பு பிரிவை மட்டும் அத்தியவாசிய பணிகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மேலும் ஒரு வாரத்துக்கு நேற்று ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு அரசாணை வெளியிட்டார். அதில், அத்தியவாசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், தலைமை செயலகம், சுகாதரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, ஊர்காவல்படை, தீணயபை–்பு துறை, சிறைத்துறை, உணவு மற்றும் கூட்டுறவு, மின்வாரியம், குடிநீர் விநியோகம், உள்ளாட்சி அமைப்பு, வேளாண்மைத்துறை, கால்நடைத்துறை தொடர்ந்து பொதுப்பணித்துறை பராமரிப்பு பிரிவு அத்தியாவசிய பணிகளில் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது….

The post பொதுப்பணித்துறை பராமரிப்பு பிரிவு: அத்தியாவசிய பணிகளின் பட்டியலில் சேர்ப்பு: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: