திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்காக காத்திருப்பு அறை திறப்பு

உடன்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பதி கோவிலைப் போன்று பொது தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் காத்திருப்போர் அறை இன்று பயன்பாட்டிற்கு வந்தது. திருப்பதி கோவிலில் கூட்ட நேரத்தில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அமர்ந்து எளிதாக தரிசனத்திற்கு செல்லும் வகையில் காத்திருப்போர் அறை உள்ளது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருவிழா விசேஷ நாட்களை தவிர்த்து நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை திருப்பதி கோவிலுக்கு இணையாக மாற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முதல் ட்டமாக பொது தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் பக்தர்கள் காத்திருப்பு அறை அமைக்கப்பட்டது. இந்த அறையில் இருக்கை, எல்இடி. டி.வி, மின்விசிறி ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கூட்ட நேரத்தில் பக்தர்கள் இந்த அறையில் அமர்ந்து குழுவாக செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த அறையானது இன்று திறந்து வைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இன்று முதல் நாளில் பக்தர்கள் கூட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories:

More
>