குடிநீர், சாலை வசதி வேண்டி எடப்பாடி தொகுதி கிராம மக்கள் கோரிக்கை; அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் எதிர்பார்ப்பு

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி எல்லையோரம் உள்ள கிராமத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி குடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எடப்பாடி அருகே மலையடிவாரத்திலுள்ள கோம்புக்காடு கிராம மக்களே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

நான்கு தலைமுறையாக இங்கு வசித்த வரும் தங்களுக்கு குடிநீர் சாலை வசதி என அடிப்படை வசதிகள் இல்லை என அவர்கள் கூறுகின்றனர். அடிப்படை வசதிகளை தேடி 5 கிமீ தூரம் வரை காட்டு வழியாக செல்ல வேண்டி இருப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், வெளி வேலைக்கு செல்பவர்கள், தனியாருக்குச் சொந்தமான இடத்தை பயன்படுத்தியதாகவும் தற்போது அவரும் வேலி வைத்து அடைத்து விட்டதாகவும் கிராம மக்கள் குமுறுகின்றனர். தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் மற்றும் நிரந்தரமான சாலை அமைத்து குடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.                       

Related Stories:

More
>