சாலையோர முட்புதர்கள் அகற்றம் நெடுஞ்சாலை துறை நடவடிக்கை

கண்டாச்சிபுரம்\ : விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த மேல் வெங்கமூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேல் ஒதியத்தூர்-வெங்கமூர் சாலையில் தினமும் வெங்கமூர் கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என கிராமத்தினர் தினமும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒதியத்தூர்-வெங்கமூர் சாலையில் அதிகளவு வளைவுகளில் முட்புதர்கள் மற்றும் பூண்டு செடிகள் வளர்ந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று இந்த முட்புதர்களை அகற்ற வேண்டி தினகரன் நாளிதழில் செய்தி வெளியிட்டது. இதனையொட்டி நெடுஞ்சாலை துறையினர்

அதிரடியாக ஒதியத்தூர்-வெங்கமூர் சாலையின் ஓரமாக காணப்பட்ட முட்புதர்கள் மற்றும் பூண்டு செடிகளை முற்றிலுமாக அகற்றினர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினகரன் நாளிதழுக்கும் நெடுஞ்சாலை துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Related Stories:

More
>