கடத்தூர் அருகே சிவனஅள்ளி பகுதியில் கிரானைட் கற்கள் வெட்டி கடத்தல்-தடுக்க வலியுறுத்தல்

கடத்தூர் : கடத்தூர் அருகே பஸ்வாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிவனஅள்ளி பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் கடந்த 30ஆண்டுக்கு முன்பு குவாரி செயல்பட்டு வந்துள்ளது. தற்போது, அப்பகுதியில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் உள்ள மலை பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள், கிரானைட் கற்களை வெட்டி கடத்துவதற்காக வைத்துள்ளனர். கிரானைட் கற்களை வெட்டி கடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் பார்வதியிடன் கேட்டபோது, அப்பகுதியில் ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories:

More
>