விழுப்புரம் தந்தை பெரியார் குடியிருப்பு அருகே சாலையில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

விழுப்புரம் :  விழுப்புரம் தந்தை பெரியார் நகர் அரசு போக்குவரத்து பணிமனை வெளிபுறத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதால், பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பரவலை தடுக்க எம்.ஜி.ரோட்டில் இருந்த காய்கறி மார்க்கெட்டை தற்போது ஜானகிபுரம் அருகே மாற்றி அமைத்துள்ளனர். இதனால் மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் அனைவரும் இந்த சாலையின் வழியேதான் செல்ல வேண்டும் என்பதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை சரிசெய்யாமல் விட்டால் விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலை முழுவதும் கழிவுநீர் பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே இப்பகுதி கழிவுநீர் வாய்க்கால் அடைப்பினை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: