அருணாச்சல பிரதேச எல்லையில் மூடுபனிக்குள் பதுங்கும் எதிரி டேங்கரை தகர்க்கும் ஒத்திகை: வீடியோ வெளியீடு

புதுடெல்லி: அருணாச்சல பிரதேச எல்லையில் இந்தியா- சீனா இரு நாடுகளுமே துருப்புகளை நிறுத்திவைத்துள்ளது. இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் சீனா எல்லையான தவாங் செக்டாரில் மூடுபனிக்குள் பதுங்கும் எதிரி டேங்கரை எப்படி தகர்க்க வேண்டும் என்ற ஒத்திகை நடைபெற்றது. இது குறித்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில், ‘ராணுவ வீரர்கள் மலைபாங்கான இடத்தில் உள்ள பதுங்கு குழிகள் மீது ஏறி துப்பாக்கிகளுடன் தயாராகின்றனர். மற்றொரு வீரர் ரேடியோ டெலிபோனி தொழில்நுட்பம் மூலம் கடும் மூடுபனியில் ராணுவ டேங்கர் பதுங்கியிருப்பதை கண்காணித்து அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். அதற்கேற்ப அந்த வீரர்கள் அந்த இடத்தை பார்த்து குறிவைக்கிறார்கள். பின்னர், அந்த ராணுவ வீரர் கட்டளை பிறப்பித்ததும் இலக்கை நோக்கி சுடுகிறார்கள். அதில் டேங்கர் தகர்க்கப்படுகிறது. பின்னர், அந்த இடத்தில் இருந்து ராணுவ வீரர்கள் வேறு இடத்துக்கு செல்கிறார்கள். இந்த ஒத்திகையை வீடியோவாக எடுத்து ராணுவ அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அருணச்சால பிரதேச எல்லையில் ராணுவ வீரர்கள், மேம்படுத்தப்பட்ட எல்-70 வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை நிலையில் நிறுத்தியுள்ளனர்.

Related Stories: