கடலூர் விபத்தில் மாணவர் சாவு: இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

கடலூர்: கடலூர் முதுநகர் அருகே காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜவேல் (15). இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 6.12.2017 டிசம்பர் 6ம் தேதி அரசு பஸ்சில் சென்றபோது டிரைவர் பிரேக் பிடித்ததில் படிக்கட்டின் அருகில் நின்ற ராஜவேல் கீழே விழுந்து பலியானார். இதையடுத்து ராஜவேலின் தாய் ஜெயலட்சுமி, இழப்பீடு கேட்டு கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் உயிரிழந்த ராஜவேலின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் இழப்பீடு வழங்க, அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் இழப்பீடு தொகை வழங்கப்படாததால் கடலூர் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Related Stories:

More
>