பிஎன்பி பாரிபா ஓபன்: படோசா, கேமரான் சாம்பியன்

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை  பவுலா படோசா, ஆடவர் ஒற்றையர்பிரிவில் இங்கிலாந்து வீரர் கேமரான் நோரி சாம்பியன் பட்டம் வென்றனர். மகளிர் ஒற்றையர் பைனலில் பெலராஸ் வீராங்கனை  விக்டோரியா அசரென்காவுடன் (32வது வயது, 32வது ரேங்க்) மோதிய படோசா (23வயது, 27வது ரேங்க்) 3 மணி, 4 நிமிடங்களுக்க கடுமையாகப் போராடி 7-6 (7-5), 2-6, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக டபிள்யூடிஏ 1000 பிரிவிலும், பாரிபா ஓபனிலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம்  27வது ரேங்கில் இருந்த படோசா 13வது ரேங்கிற்கும், 2வது இடம் பிடித்த  அசரென்கா 32லிருந்து 26வது  ரேங்கிற்கும் முன்னேறினர்.

பாரிபா ஓபனில் 3வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய அசரென்கா 2வது இடத்துடன் திருப்தி அடைந்தார். ஆண்கள் ஒற்றையர் பைனலில் ஜார்ஜியா வீரர் நிகோலஸ் பாசிலாஷ்விலியுடன் (29வயது, 36வது ரேங்க்) மோதிய கேமரான் (26வயது, 26வது ரேங்க்) 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்றார். இப்போட்டி 1 மணி, 49 நிமிடங்களுக்கு நீடித்தது. ஏடிபி 1000 மாஸ்டர்ஸ் பிரிவில்  கேமரான் பெறும் முதல் சாம்பியன்பட்டம் இது. தரவரிசையில்  அவர் 11 இடங்கள் முன்னேறி 15வது இடத்தை  முதல்முறையாக பிடித்துள்ளார். 2வது இடம் பிடித்த  நிகோலஸ் 9 இடங்கள் முன்னேறி 27வது இடத்தை பிடித்துள்ளார்.

Related Stories: