இந்தியாவில் அடுத்த வாரத்திற்குள் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும்: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்..!

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, தினந்தோறும் பல லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில்  97.25 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், டெல்லியில் நடந்த விழாவில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக தொடர்வதால் மக்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை அடுத்த வாரம் 100 கோடியை கடக்கும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியதும் துறைமுகங்கள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார்.

Related Stories: