தொடர் மழை எதிரொலி பூக்கள் அழுகி பொலிவிழந்த குன்னூர் சிம்ஸ் பூங்கா

குன்னூர் : தொடர் மழை காரணமாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூக்கள் அழுகி பொலிவிழந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2ம்  சீசனுக்காக ஒன்றரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்த மலர்கள் அனைத்தும் பூத்து குலுங்கியது. அவற்றை காண தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வந்தது.

ஆனால் கடந்த சில தினங்களாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கன மழையுடன் கடும் குளிர் நிலவுவதால் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள டேலியா, சால்வியா, மெரிகோல்டு, கார்னீஷன் உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட மலர்கள் அழுகியுள்ளது. இதனால் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது.

Related Stories: