ராகுல்காந்தி, பிரியங்கா ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

புதுடெல்லி: லக்கிம்பூர்கேரி விவகாரம் தொடர்பாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சரை நீக்க வேண்டும் என்று  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பொது செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் அடங்கிய காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளிக்கவுள்ளனர். லக்கீம்பூர் கேரி விவகாரம் தொடர்பாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கடந்த சனியன்று உத்தரப்பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

 இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையிலான 7 பேர் கொண்ட காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கின்றனர். ஒன்றிய உள்துறை இணை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஜனாதிபதியிடம் கோரிக்கை அனு அளிக்க உள்ளனர்.

காங்கிரஸ் பிரதிநிதிகள் கூட்டத்தில் கார்கே, மூத்த தலைவர்கள் ஏகே அந்தோனி, குலாம் நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, காந்தி மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: