பழநி ஊராட்சி ஒன்றிய வார்டு தேர்தலில் திமுக வெற்றி: அதிமுகவுக்கு டெபாசிட் காலி

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி ஊராட்சி ஒன்றிய 11வது வார்டு தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதிமுக உள்ளிட்ட பிற கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். பழநி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை பழநி யூனியன் அலுவலகத்தில் நடந்தது. இதில் திமுக வேட்பாளர் ராமராஜ் 2,990 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் மணிகண்டன் 501 வாக்குகள் பெற்றார்.

இதன் மூலம் திமுக வேட்பாளர் ராமராஜ் 2,489 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றிக்கான சான்றினை தேர்தல் நடத்தும் அதிகாரி அன்புமணி வழங்கினார். அதிமுக வேட்பாளர் உட்பட மற்ற அனைவரும் டெபாசிட் தொகையை இழந்தனர்.

Related Stories: