கிர்கிஸ்தான் மேம்பாட்டுக்கு ரூ.1507 கோடி இந்தியா கடனுதவி

புதுடெல்லி:  கிர்கிஸ்தான் நாட்டின் மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.1507 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய ஆசிய நாடுகளுடனான உறவை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளுக்கு ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் அமைச்சர் ஜெய்சங்கர் கிர்கிஸ்தான் சென்றார். இதனை தொடர்ந்து அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ருஸ்லான் கசாக் பேவை நேற்று அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்திய மாணவர்கள்  பயணத்திற்கான  பாரபட்சமற்ற விசா நடைமுறை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரு நாடுகளுக்குமான ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கிர்கிஸ்தான் நாட்டின் மேம்பாட்டு திட்ட பணிகளுக்காக இந்தியா ரூ.1507 கோடி கடன் உதவி வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Related Stories: