தொடர் மழையால் செடியிலே அழுகும் செண்டுமல்லி-விவசாயிகள் கவலை

போச்சம்பள்ளி :  போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பரவலாக செண்டுமல்லி சாகுபடி செய்துள்ளனர். மேரிகோல்ட் என அழைக்கப்படும் செண்டுமல்லி, வீரிய ஒட்டுரக செடி 35 நாட்களில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். இந்த வகை பூக்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதால் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு ஆயிரம் முதல் 7 ஆயிரம் செடிகள் நட்டு வளர்க்க முடியும். ஒரு செடியில் இருந்து 2 கிலோ பூக்கள் கிடைக்கும்.

இதனால், நல்ல லாபம் கிடைப்பதால், விவசாயிகள் செண்டுமல்லி சாகுடியில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில், போச்சம்பள்ளி பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர் மழை பெய்து வருவதால், சாகுபடி செய்யப்பட்ட செண்டுமல்லி செடியிலேயே அழுகி வருகிறது. வரும் 14ம் தேதி சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு செண்டுமல்லி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் தொடர் மழையால் பூக்கள் செடிகளிலே அழுகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: