418 கிலோ வெள்ளி ஆபரணங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட முதல்வர் ஜெகன் மோகன் உருவப்பட ஓவியம்..சமூகவலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ

கோயம்புத்தூர்: ஆந்திராவில் 418 கிலோ வெள்ளி ஆபரணங்களை கொண்டு முதல்வர் ஜெகன் மோகன் உருவப்பட ஓவியம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் கொரோனா பேரிடர் காலத்திலும், நிதி நெருக்கடி இருப்பினும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி பல மக்கள் நல திட்டங்களை செய்து வருகிறார்.

அவரின் சேவையை பாராட்டி நெல்லூர் புறநகர் மேம்பாட்டு வளர்ச்சி கழக தலைவர் முக்கல துவாரகாநாத் முதல்வர் ஜெகன் மோகன் உருவப்படத்தை வெள்ளி ஆபரணங்களால் வரைபடத்தை உருவாக்கியுள்ளார்.   இதற்காக ஒரே நேரத்தில் 418 கிலோ வெள்ளியுடன், முதல்வர் ஜெகன் மோகன் படத்தை ஜோடிக்கப்பட்டது. இதற்காக கோயம்புத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில், வெள்ளியில் செய்யப்பட்ட கொலுசு, வளையல், கால் மெட்டி என பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு முதல்வர் ஜெகன் மோகன் உருவாக்கப்பட்டது.

கேரளாவை சேர்ந்த திரைப்பட கலை இயக்குனர் சுரேஷு என்பவர் இதனை உருவாக்கியுள்ளார். திரைப்பட கலை இயக்குனர் சுரேஷு கூறுகையில், முதல்வர் ஜெகன் மீதான தனது அபிமானத்தை வெளிப்படுத்தும் விதமாக 12 மணி நேர சிரமத்திற்கு பிறகு 35 அடி உயரம்,  20 அடி அகலத்தில் வெள்ளி ஆபாரணங்களால் அவரின் உருவப்படத்தை 8 நகை அலங்கார நிபுணர்கள் வடிவமைத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.  

மேலும் இந்த ஆபரணத்தால் செய்யப்பட்ட ஓவிய லோகோவை நெல்லூரில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அனில்குமார் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories: