பாஜக தேசிய நிர்வாக குழு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம்: நீக்கப்பட்ட 24 மணி நேரத்தில் டிவிட்டரில் பாஜகவை தூக்கிய சுப்பிரமணியன் சாமி

டெல்லி: பாஜக தேசிய நிர்வாக குழு உறுப்பினர் பட்டியலில் பாஜகவின் மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி நீக்கப்பட்டதை அடுத்து அவர் தனது டிவிட்டர் பயோவில் இருந்து பாஜக என்பதை நீக்கியுள்ளார். கடந்த சில நாட்களாக பாஜகவின் அனைத்து கருத்துக்களுக்கும் நேரெதிரான கருத்துக்களை சுப்பிரமணியன் சாமி தெரிவித்து வந்தார். தான் இருக்கும் கட்சி என்றும் பாராமல் நேரடியாக விமர்சனங்களை முன்வைத்து வந்தார். உதாரணமாக இந்தியாவிற்கு எதிராக சீனா இலங்கை நாடுகளின் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவிப்பது, தமிழகத்தில் பாஜக எடுக்கும் கூட்டணி முடிவுகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது என பல இடங்களில் பாஜகவின் உள்விவகாரங்களில் தனி கருத்தை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் சுப்பிரமணியன் சாமி பாஜகவின் இருந்து நீக்கப்படுவார் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் பாஜக தேசிய நிர்வாக குழு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். இந்த முடிவு எடுக்கப்பட்ட 24 மணி நேரத்தில் பாஜக என்ற வார்த்தையை டிவிட்டர் பயோவில் இருந்து நீக்கியுள்ளார். பாஜக என்பதை நீக்கிவிட்டு Rajya Sabha MP, Former Union Cabinet Minister, Harvard Ph.D in Economics; Professor, I give as good as I get என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளார். சுப்பிரமணியன் சாமியின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: