தெற்கு சீன கடல் பகுதியில் அமெரிக்காவின் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் விபத்தில் சிக்கியதில் 15 வீரர்கள் காயம்

வாஷிங்டன் : தெற்கு சீன கடல் பகுதியில் அமெரிக்காவின் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் விபத்தில் சிக்கியதில் 15 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவுக்கு சொந்தமான USS Connecticut என்ற அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் கடந்த 2ம் தேதி தென் சீன கடற்பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில் அமெரிக்க படையினர் 15 பேர் காயம் அடைந்தனர். நீருக்கு அடியில் அடையாளம் தெரியாத பொருள் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மோதல் எப்படி ஏற்பட்டது என்று இதுவரை தெளிவாக தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அண்மையில் தாய்வானை வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீன போர் விமானம் அத்துமீறி நுழைந்தது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அந்த பதற்றம் தணியும் முன்னரே அமெரிக்காவின் அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல் விபத்தில் சிக்கியுள்ளது. தென் சீன கடலில் பெரும் பகுதி தனக்கே சொந்தம் என்று சீனா கூறி வரும் நிலையில் அமெரிக்கா உட்பட்ட அந்த பகுதியில் உள்ள பல்வேறு நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் அமெரிக்காவின் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் விபத்தில் சிக்கியது பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது. 

Related Stories: