உயர் நீதிமன்ற உத்தரவுபடி உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் மீது காவல் துறையை வைத்து பொய்யான வழக்குகளை பதிவு செய்து, அவர்களை அச்சுறுத்தலுக்கு உண்டாக்கி, மன உளைச்சலை ஏற்படுத்தி, தேர்தல் பணிகளை செய்யவிடாமல் தடுக்கக்கூடிய முயற்சிகளிலே இறங்கி இருக்கிறது. குறிப்பாக பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் காலம் காலமாக அதிமுக கோட்டையாக இருந்து வரும் நிலையில், அவர்களை தேர்தல் பணி செய்யவிடாமல் காவல் துறையை வைத்து அச்சுறுத்தலை தந்து கொண்டிருக்கிறது திமுக அரசு.  

தேர்தல் விதிமீறலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் ஏற்கனவே வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. வழக்கில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மனுவில் உள்ள அனைத்து சாராம்சங்களையும்

உறுதியாக நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், உயர் நீதிமன்றம் விரிவான உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசை வன்மையாக கண்டிப்பதோடு, உயர் நீதிமன்ற உத்தரவை முழுவதுமாக நிறைவேற்றி, நியாயமான முறையில் தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

Related Stories: