திருச்சி அருகே மயானத்தில் சடலத்தின் மீது ஏறி அமர்ந்து அகோரிகள் பூஜை: சங்கு ஒலி எழுப்பி, டம்ரா அடித்து விசித்திர பூஜை

திருச்சி: திருச்சி மாவட்டம் அறியமங்கலத்தில் சடலத்தின் மீது அமர்ந்து அகோரிகள் விசித்திர பூஜாரிகள் நடத்தினர். வடமாநிலங்களை போல மணிகண்டன் என்பவர் அடிக்கடி அகோரி பூஜை நடத்தி வருவது சர்ச்சையை கிளப்பி உள்ளது. பார்ப்பதற்கே விசித்திரமாக உடலில் ஆடை அணியாமல் கையில் எலும்புகளையும், உடல் முழுவதும் திருநீறு பூசியும் சுடுகாடுகளை ஒட்டிய பகுதிகளில் வாழும் அகோரிகளை காசி போன்ற வட இந்திய மாநிலங்களில் தான் காண முடியும். ஆனால் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் அறியமங்கலத்தில் உள்ள சுடுகாட்டில் அகோரிகள் பூஜை நடத்தியுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த வெங்கடேஷ் என்பவரது சடலத்தின் மீது மணிகண்டன் என்ற அகோரி ஏறி அமர்ந்து ஜென்ம சாந்தி பூஜை நடத்தினார். சங்கு ஒலி எழுப்பியும் டம்ரா மேளம் அடித்தும் பூஜையில் ஈடுபட்டனர். காசிக்கு சென்று திரும்பிய மணிகண்டன் அகோரி பூஜைகளை கற்றுக்கொண்டு அறியமங்கலத்தில் அகோர காளி சிலையை வைத்து வழிபட்டு வருகிறார். உயிரிழந்த வெங்கடேஷ் இவரிடம் சிஷ்யராக இருந்ததாகவும், அதன் காரணமாகவே குடும்பத்தினர் அனுமதித்ததாகவும், கூறப்படுகிறது. மணிகண்டன் ஏற்கனவே இது போன்று பல முறை பூஜைகள் நடத்தி சர்ச்சையில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: