தனிப்பெருங்கருணை நாள் அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேல்முருகன் பாராட்டு

சென்னை: தவாக தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: மெய்யியல், மொழியியல், மருத்துவம், வாழ்வியல் உள்ளிட்ட பல துறைகளில் ஆழமான புதிய கருத்துகளை முன்வைத்தவர் வள்ளலார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்திய தர்ம சாலையை நிறுவினார். நீண்ட நெடிய மரபுள்ள தமிழர் ஆன்மிகச் சிந்தனைத் தொடரில் வள்ளலார் ராமலிங்க அடிகளின் சமரச சுத்த சன்மார்க்கம் என்பது மிகப்பெரிய பாய்ச்சலாகும். 18ம் நூற்றாண்டிலேயே, மூடநம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிராக பேசியதோடு, தந்தை பெரியாருக்கு முன்பாகவே, சாதி, மதங்களை கடுமையாக எதிர்த்தவர் வள்ளலார். இப்படி பல்வேறு சிறப்புக்குரிய வள்ளலாரை போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான அக்டோபர் 5ம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாளாக கடைப் பிடிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: