திருப்பத்தூரில் பாலியல் தொல்லை கொடுத்த மின்வாரிய செயற்பொறியாளர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஆக பணியாற்றி வருபவர் கிருஷ்ணன். இவர் பல ஆண்டுகாலமாக இதே பகுதியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் 4 பெண்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் பெண்களின் கைகளை பிடிப்பதும், கன்னத்தில் கைவைத்து கிள்ளுவது, போன்ற உடல் ரீதியாக பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து நான்கு பெண்களும் மேற்பார்வை பொறியாளர், மற்றும் தமிழக முதல்வர், மின்சார துறை அமைச்சர்,உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினர்.

இந்த நிலையில் இவர் மீது துறை சார்ந்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவர் மீது பணி நீக்கம் உள்ளிட்ட உத்தரவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி நேற்று முன்தினம் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் எதிரே அனைத்து சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் அன்பரசன் தலைமை தாங்கினார். ஞானப்பிரகாசம் முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் சிவ சீலன். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதில் பெண்களுக்கு சக ஊழியர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த செயற்பொறியாளர் கிருஷ்ணன் மீது பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒரு உயர் அதிகாரியே தனக்குக் கீழ் பணியாற்றும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். எனவே விசாகா கமிட்டி அமைத்து அவர்களை விசாரணை மேற்கொண்டு உடனடியாக பணிநீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பாண்டியன் நன்றி கூறினார்.

Related Stories: