சிகாகோ: அமெரிக்காவில் நடைபெறும் சிகாகோ ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா தகுதி பெற்றார். 3வது சுற்றில் ருமேனியா வீராங்கனை எலனா கேப்ரியலா ரூஸுடன் (98வது ரேங்க்) மோதிய ஸ்விடோலினா 6-3, 6-3 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி ஒரு மணி, 48 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 3வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் (12வது ரேங்க்), தெரசா மார்டின்கோவா (53வது ரேங்க், செக் குடியரசு) மோதினர். இதில் பெலிண்டா 6-2, 7-6 (7-5) என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 41நிமிடங்களுக்கு நீடித்தது.