12வது மாவட்ட வார்டில் வெற்றி பெற்றால் குடிநீர், சாலை, பேருந்து வசதிகளை ெசய்து ெகாடுப்பேன்:மாவட்ட வார்டு வேட்பாளர் ராஜாராமகிருஷ்ணன் உறுதி

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், 12வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணன், மதுராந்தகம் 21வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடும் அன்புச்செல்வன், 19வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் தரணி பாஸ்கர் ஆகியோரின் தேர்தல் அலுவலக திறப்பு விழா, தொன்னாடு கிராமத்தில் நடந்தது. இதனை, சென்னை திருவிக நகர் தொகுதி திமுக எம்எல்ஏ தாயகம் கவி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடந்து மாவட்ட ஊராட்சி குழு வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணன் பெருவெளி, நெட்ரம்பாக்கம், சரவம்பக்கம், தொன்னாடு ஆகிய கிராமங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று நான் பதவியேற்றவுடன் கிராமங்களில் பஸ் வசதி, குடிநீர் பிரச்னை, தெருவிளக்கு, சாலை வசதி ஆகியவற்றை உடனுக்குடன் செய்து தர நடவடிக்கை எடுப்பேன். தமிழக அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை, திருமண நிதி உதவி உள்பட அனைத்து நலத்திட்ட உதவிகள், மத்திய, மாநில அரசின் நிதி உதவிகளை பெற்றுத்தர முழு மூச்சுடன் பாடுபடுவேன் என்றார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், பெருவெளி நிர்வாகிகள் கதிரவன், எட்டியப்பன், ருத்ரமூர்த்தி, மூர்த்தி, ராதா ராஜன், செல்வபாரதி, பிரதாப் சங்கர், செல்வநிதி, மகேஷ், வெங்கடேசன், நெட்ரம்பாக்கம் நிர்வாகிகள் டில்லி, மகேஸ்வரன், தெய்வமணி, ஹரி, சுகுமார், நாராயணன், மனோகரன், சீனிவாசன், சரவம்பக்கம் நிர்வாகிகள் புகழேந்தி, சக்கரபாணி, தாமோதரன், சீனிவாசன், மோகன், சுதாகர், இளங்கோவன், பன்னீர்செல்வம், கோபிகிருஷ்ணன், சுரேஷ், தீபக், பிரேம், தொன்னாடு நிர்வாகிகள் வேணு, சீனிவாசன் வாசுதேவன், பாண்டியன், கஜபதி, ஜெயந்தி, சிவக்குமார், சண்முகம், மதியழகன், ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: