ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி உறுதி: திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு

திருக்கழுக்குன்றம்: தமிழகத்தில்  நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர், ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர், ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் ஆகியோரின் அறிமுக கூட்டம் திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம் புதுப்பட்டினத்தில்  நேற்று முன்தினம் மாலை  நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது அவர் பேசுகையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும்.

முதல்வரின் திட்டங்கள் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளன. குறிப்பாக, மகளிருக்கு இலவச பஸ்  பயணம், பெட்ரோல் விலை ₹3, பால் விலை ₹3 குறைப்பு, கோயில் அர்ச்சகர்களுக்கு நிதியுதவி, கோயில் நிலங்கள் மீட்பு, மக்களை தேடி மருத்துவம், கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்பட பல திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தலில் 1100 சதவீதம் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றார்.

Related Stories: