குமரி, நெல்லையில் கனமழை நீடிப்பு பெருஞ்சாணி, பாபநாசம் அணை ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேரூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் தொடர்ந்து மிகஅதிகளவில் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று காலையில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.08 அடியாகவும், பெருஞ்சாணி நீர்மட்டம் 63 அடியாகவும் இருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்திருந்தது. தொடர் மழை காரணமாக விளவங்கோடு தாலுகா பகுதிகளில் 2 வீடுகளும், கிள்ளியூரில் 3 வீடுகளும் இடிந்துள்ளன.

நெல்லை: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பாபநாசம் அணையில் 79.75 அடியாக இருந்த நீர்மட்டம் மேலும் 4 அடி உயர்ந்து நேற்று காலை 83.15 அடியானது.

Related Stories:

>