ஆபாச படம் வெளியிடுவதாக டிக்டாக் மாணவிக்கு மிரட்டல்: வாலிபர் அதிரடி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் ரஹ்மானுல் பாக்கிர் (20). கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக் மூலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரையை சேர்ந்த பிளஸ் 2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் நெருங்கி பழகி வந்தனர். அப்போது நைசாக பேசி மாணவியின் ஆபாச படங்களை வாங்கியுள்ளார்.

பின்னர் அந்த புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்று கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் மாவேலிக்கரை போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து ரஹ்மானுல் பாக்கிரை கைது செய்தனர்.

Related Stories:

>