பட்டப்பகலில் முடீஸ் பஜாரில் புலி நடமாட்டம்-வனத்துறை எச்சரிக்கை

வால்பாறை : வால்பாறையை அடுத்து முடீஸ் பஜார் மற்றும் முத்துமுடி,தாய்முடி  எஸ்டேட் பகுதியில் நேற்று புலி நடமாட்டம் காணப்பட்டது.கோவை மாவட்டம்ட வால்பாறையை  அடுத்துள்ளது முடீஸ் பஜார். அப்பகுதியில் உள்ள நியாய விலை கடை பகுதியில்  நேற்று காலை புலி நடமாட்டம் காணப்பட்டது. மேலும் மக்கள் நடமாட்டத்தை பார்த்து மாற்று  இடத்திற்கு சாலையில் நடந்து சென்ற புலியை அப்பகுதி மக்கள் பார்த்து  உள்ளனர். சிலர் சிறுத்தையாக இருக்கும் என அருகில் சென்றவர்கள், புலி என்பதை  உறுதி செய்து ஓட்டம் பிடித்தனர்.

சிலஅடி தூரத்தில் நின்று புலியை போட்டோவும்  பிடித்து உள்ளனர். இந்நிலையில் புலியின் நடமாட்டம் குறித்து முன்னாள் கவுன்சிலர்  ராஜதுரை மானாம்பள்ளி வனத்துறைக்கு  புகார் அளித்தார். வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்படி,  வனச்சரகர் மணிகண்டன், வனவர் உமர் உள்ளிட்ட பலர் அப்பகுதிக்குச் சென்று  ஆய்வு செய்துள்ளனர்.

ட்ரோன் கேமராக்கள் வைத்து புலியை தேடினர். தொடர்ந்து  நேற்று காலை முதல் வால்பாறை பகுதியில் மற்றும் மூடுபனி காணப்பட்டதால்  புலியை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் வனத்துறை  வாகனம் மூலம் புலி நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன்  இருக்க வேண்டும் என்றும் புலியின் உடல் சுகவீனமாக  காணப்படுவதால் அது  குடியிருப்பு பகுதியில் உணவு தேட வாய்ப்பு உள்ளது பாதுகாப்பாக இருக்க  வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: